fbpx
Homeபிற செய்திகள்21 ஆண்டுகளுக்கு பின் அரசு பஸ் சேவை- மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

21 ஆண்டுகளுக்கு பின் அரசு பஸ் சேவை- மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் எஸ்.மேடூர், காரனூர், ராமேகவுண்டன்புதூர், இலுப்பநத்தம்,திம்மனூர் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இதனையடுத்து மேற்கண்ட கிராமங்களில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள இப்பள்ளிக்கு தினசரி 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை,மாலை வேளைகளில் நடந்து சென்று கல்வி பயின்று வந்தனர்.

எனவே, தினசரி காலை புளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் அரசுப்பேருந்து மேலூர் பிரிவில் இருந்து மாதப்பன் நகர் வழியாக எஸ்.புங்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக செல்ல வேண்டுமென அப்பகுதி மக்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து நேற்று முதல் புளியம் பட்டி பேருந்து நிலையத் திலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் 10 ஏ என்ற எண்ணுள்ள அரசுப்பேருந்து எஸ்.மே டூர் பிரிவு வந்து மாதப்ப நகர் வழியாக எஸ்.புங்கம்பாளையம் அரசுப்பள்ளியை சென்றடைந்து, பின் னர் அங்கிருந்து மேட்டுப் பாளையம் சென்றது.

21 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முதல் போக்குவரத்து சேவை துவங்கியதால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லா மல் அப்பகுதியைச்சேர்ந்த பெற்றோர்களும், மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேருந்து சேவையினை திமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலா ளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந் தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
பின்னர், மாணவ, மாணவிகளுக் கும், பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் போக்குவரத்துக்கழக தொமுச செயலாளர் சசிராஜ், தலைவர் கோவிந்த ராஜ், பொருளாளர் வேல் முருகன், துணை
தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img