fbpx
Homeபிற செய்திகள்வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் வணிகர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் தலைமையில் மாவட்ட தலைவரும் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளருமான இரா.க.சண்முகவேல் மற்றும் கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் மு.பாலகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதில் தினசரி மார்க்கெட்டில் வணிகம் செய்யும் வணிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் வந்து ஆர்வமாக தங்களை வணிக நல வாரியத்தில் இணைத்துக் கொண்டனர்.
முன்னதாக வணிக நல வாரியத்தில் உள்ள பயன்களும், அதை பெறுவதற்கான வழிமுறை களையும் இளைஞர் அணி நிர்வாகிகள் பீ.ரியாஸ் அகமது, சி.தங்கராஜ், ச.தமிழரசன் ஆகியோர் எடுத்துரைத்தனர். வாரியத் தில் பதிவு செய்த உறுப் பினர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img