fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு தலைகுனியாது: கோவையில் திமுக சார்பில் தொழில் முனைவோர், நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தலைகுனியாது: கோவையில் திமுக சார்பில் தொழில் முனைவோர், நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம்

கோவை ஜி.பி. கேலக்ஸி அரங்கில் மாநகர் மாவட்ட திமுக சார்பில் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கான “தமிழ்நாடு தலைகுனியாது” தொழில் முனைவோர், நகர் நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுகழக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் புகழேந்தி சிறப்புரையாற்றினார். நிகழ்வில்,திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) பங்கேற்றார்.

மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், தெற்கு சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள், நகர் நலச் சங்க நிர்வாகிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img