fbpx
Homeபிற செய்திகள்‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

சிதம்பரம் அண்ணா மலை நகரில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்.

சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மங்கையர்க்கரசி, அண்ணா மலைநகர் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பேரூராட்சி துணைத்தலைவர் தமிழ்ச் செல்வி, கவுன்சிலர்கள் தங்க.அன்பரசு, விஜயலட்சுமி, துப்புரவு அலுவலர் துரைராஜ், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img