கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று காலை நடைபெற்ற, காலநிலை மாற்றம் – பசுமை கட்டுமான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) பங்கேற்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், தடகள வீரர்கள் & வீராங்கனைகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.



