இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமான ஹங்காமா (பிuஸீரீணீனீணீ), அதன் முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான ‘மாயத் தோட்டா’வை வெளியிடுகிறது. இந்தத் தொடரில் தமிழ் திரைத் துறையின் பிரபல நட்சத்திரங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் மற்றும் குமரன் தங்கராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
உயர் பாதுகாப்புக்கு மத்தியில் மர்மமான சூழ்நிலையில் அமைச்சர் ஒருவர் படுகொலை செய்யப்படுவதுடன் இந்த இணையத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கொடூரமான கொலை யின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண ரும் போலீஸ் விசாரணை, நேரத்துடன் போட்டி போடும் ஒன்றாக மாறுகிறது.
நந்தகுமார் ராஜூ இயக்கியுள்ள இந்த இணையத் தொடரை, ஹங்காமா வுடன் இணைந்து மது அலெக்சாண்டர் மற்றும் பிரபு ஆண்டனி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
நிகழ்ச்சியைப் பற்றி ஹங்காமா டிஜிட்டல் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சித்தார்த்த ராய் கூறுகையில், “எங்களின் நேரடி நிகழ்ச்சிகளைக் கொண்ட விரிவான ஒரு தொகுப்பு மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்குவது, புதுமை செய்வது, வழங்குவது தான் ஹங்காமா நிறுவனத்தின் நோக்கம்.
எங்களுடைய முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான மாயத் தோட்டாவின் மூலம், தென்னிந்தியாவில் எங்களின் தடத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு படி முன்னேறியுள்ளோம். தமிழ் பிராந்திய சந்தையில் நாங்கள் நுழைந்திருக்கிறோம்.
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு மற்றும் அழுத்தமான கதைக்களம் ஆகியவற்றுடன் கூடிய இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
பிராந்திய மக்கள், குறிப்பாக தெற்கில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில் முழுமையான பொழுதுபோக்கு சார்ந்த கூடுதல் நிகழ்ச்சிகளைத் தொடங்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்றார்.