உலகின் முன்னணி ஏர் கம்ப்ரஷர் நிறுவனமாக எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், அங்கீகரிக்கப் பட்ட பங்குதாரரான கம்ப்ரஸ்ட் ஏர் கன்ட்ரோலுடன் இணைந்து, முற்றிலும் ஆயில் இல்லா ‘கிளாஸ் 0’ வகை டர்ன்கீ கம்ப்ரஸ்டு ஏர் சிஸ்டம் தீர்வை, நியூசிலாந்து ஆராய்ச்சி குழுவிற்கு அமைத்து தந்துள்ளது.
நியூசிலாந்தில் பால்மெர்த்ஸ் டான் வடக்கில், மனவட்டு இடத்தில் உள்ள மெஸ்ஸி பல்க லைக்கழக வளாகத்தில் உள்ள ஏஜி ஆராய்ச்சி மற்றும் ரிடெட் நிறு வனம் இணைந்து அமைத்த டெ ஒகு ரங்கவ் காய் வசதியில் 100 சதவீத ஆயில் இல்லா கம்ப்ரஷர் தேவைப்பட்டது.
ஆராய்ச்சி மையத்தில் பெருமளவிலான மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட அதிநவீன உணவு அறிவியல் ஆய்வு கருவிகள் உள்ளன. மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டருக்கு உயர்ந்த அளவிலான தூய்மையான நைட்ரஜன் உணவில் உள்ள மூலக்கூறுகளை ஆராய தேவைப்பட்டது.
இதற்கென நைட்ரஜன் ஜெனரேட்டர், 100 சதவீத ஆயில் இல்லா ‘கிளாஸ் 0’ வகை, ஐஎஸ்ஓ 8573-1 சான்று பெற்ற கம்ப்ரஸர் அவசியமாக இருந்தது.
சரியான தீர்வு தரும் ஏர் கம்ப்ர ஸரை கேட்டு, மஸ்ஸே பல்கலைக் கழகம், எல்ஜியின் நீண்ட கால நிலையான பங்குதாரரான கம்ப் ரஸ்டு ஏர் கன்ட்ரோல்ஸ் ஐ தொடர்பு கொண்டது.
கம்ப்ரஸ்டு ஏர் கன்ட்ரோல்ஸ் பகுதி மேலாளர் ஸ்டீவ் கேரன் கூறுகையில், இந்த தேவையை நிறைவேற்ற , எல்ஜி ஏபி37 உடன் ஆயில் இல்லா ஸ்க்ரு ஏர் கம்ப்ரஷர் மற்றும் ஏர்மேட் இஜிஆர்டி 200 குளுமையூட்டும் காற்று உலர்த்தி, வடிகட்டியுடன் முழுமையான ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் கம்ப்ர ஸரை வடிவமைத்தோம் என்றார்.
மஸ்ஸே பல்கலைக் கழகத்தின் திட்ட மேலாளர் கெய்த் ஹார்வே பேசுகையில், மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டரில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் அமைப்பில், ஆயில் இல்லா கிளாஸ் 0 வகை சான்று பெற்ற காற்றழுத்தம் தேவைப்பட்டது. இந்த தேவையை நிறைவேற்ற எல்ஜியின் ஏபி சீரிஸ் முன்வந்தது.
ச
மீபத்தில் நிறுவப்பட்ட எல்ஜி காற்றழுத்த தீர்வு மற்றும் கம்ப்ரஷ்டு ஏர் கன்ட்ரோல் நிபுணர்களின் சேவை, எங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்தது என்றார்.
எல்ஜி ஓசியா, செயல் இயக்குநர் ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில், எல்ஜியின் ஏபி சீரிஸ் எண்ணெயில்லா காற்றழுத்த தொழில்நுட்பமானது, மிகவும் நுட்பமான தொழில்நுட்பத்தில் இயங்கும் என்றார்.