கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள சாந்தி திரையரங்கம் முன், இன்று (வியாழன்) கோவை மாநகர் மாவட்ட திமுக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் அணி சார்பில் நடைபெற்ற “உழைப்பாளர் தினம்”நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட திமுக செய லாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி, ஆட்டோ தொழிற்சங்க பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
பின்னர், 500 ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
மாநகர் மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.ஜெயகுமார் தலைமையில், மாநில தொழி லாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்செல்வன், பகுதிகழக செயலாளர் வி.ஐ.பதுருதீன், வட்டக் கழகச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செல்லப்பா, ஆர்.முகிலன், நவாஸ், அஜீஸ், கோவை இக்பால், துணை அமைப்பாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி முத்தழகன், சபரிகோபால், வீரகேரளம் சுரேஷ், வினோத், ஜெபராஜ், ஜலீல், அக்கீம், ஸ்டீபன், ஆசிப், சாதிக், கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் அணி நிர்வாகிகள்,தொமுச.தொழிற்சங்க நிர்வாகிகள், ஏராளமான தொமுச தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



