கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மாஸ்டர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சென்டரை (MCCC) நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர், திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மேற்கு மண் டல காவல் துறை தலைவர் ரம்யா பாரதி, கோவை சரக காவல் துணை தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட காவல் அலுவலகத் தின் 4-வது மாடியில் சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில் அமைக் கப்பட்டுள்ள இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய LED வீடியோ மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு வசதிகள் மூலம் மாவட்டம் முழு வதும் உள்ள CCTV மற்றும் ANPR கேமராக்கள் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன.


மேலும், 1500-க்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள், அனைத்து காவல் நிலையங்களின் கண்கா ணிப்பு வசதிகள், Dial-100-100 அவசர சேவை, Kakki beat, Smart Kavalar, சமூக வலைதள கண்காணிப்பு, சைபர் குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இந்த மையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, தொழில்நுட்ப ஆதாரமுடைய மற்றும் மக்கள் நட்பு காவல் சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த மாஸ்டர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சென்டர் செயல்படும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.



