கோவை அவிநாசி ரோடு சிட்ரா பகுதி தனியார் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் முன்பு, யூ டேர்ன் (U turn) அமைக்கப்பட்டுள்ளது-. அங்கு யூ டேர்ன் எடுத்து வலது புறம் திரும்பும் வாகனங்களுக்கு அங்கு வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

அந்த இடத்தில் சாலையின் இடதுபுறமாக சென்று திரும்ப வேண்டியிருப்பதால் பின்னால் வரும் வாகனங்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் அந்த இடத்தின் அருகிலேயே பஸ் நிறுத்தமும் இருப்பதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால் வலது புறம் திரும்பி செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தைப் போக்கும் வகையிலும் விபத்துக்களை தவிர்க்கவும் பேரிகார்டுகளை சற்று பின்புறமாக தள்ளிவைக்கலாம் அல்லது அப்புறப்படுத்தலாம் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.



