கோவை, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 33வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் (04.07.2026) (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது. துணை வேந்தர் பேராசிரியர் எலைஜா பிளசிங் வரவேற்றார். மஹிந்திரா – மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத் தலைவர் மற்றும் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமோட்டிவ் நிறுவனம், சென்னை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.வேலுசாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.

மாணவர்கள் தன்னம்பிக்கையு டன் சவால்களை எதிர்கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்கு பங்க ளிக்கும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்ற அவர், கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம் என்றும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக மட்டுமல்ல, தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாகவும் திகழ வேண்டும் என வலியுறுத்திய அவர், திறமை, நேர்மை, கருணை மற்றும் தொடர்ச்சியான கற்றலின் அவசியத்தை எடுத்துரைத்து, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். துணைவேந்தர் ஆண்டறிக்கையை வாசித்தார்.

காருண்யா நிகர்நிலைப் பல்க லைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி தங்களின் படிப்புகளை வெற் றிகரமாக முடித்த மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசியதாவது: இன்று உங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியளிக் கும் ஒரு நாள். உங்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாக இன்று நீங்கள் பட்டங்களைப் பெறுகிறீர்கள். காருண்யா பல்கலைக்கழகத்தில் நீங்கள் தரமான கல்வியை மட்டு மல்ல, உயர்ந்த ஒழுக்க நெறிகளை யும், மனிதநேய பண்புகளையும் கற்றிருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் எங்கு சென்றாலும் இந்த உயர்ந்த பண்புகளை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்.

இன்று உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – Al) அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண்மை, வணிகம், கல்வி, தொழில்நுட்பம் என எந்தத் துறையிலும் AI-யின் தாக்கம் இல்லாத இடமே இல்லை. எனவே, AI தொடர்பான உங்கள் அறிவை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கு பவர்களாக (Entrepreneur) மாறுங்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பட்ட தாரியின் வெற்றிக்குப் பின்னாலும் பெற்றோரின் தியாகம் இருக்கிறது. இந்த வெற்றி உங்களுடையது மட்டு மல்ல; உங்கள் பெற்றோர்க ளின் வெற்றியும் கூட, அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பட்டம் பெற்ற மாணவர கள் தங்களின் சமூக பொறுப்பின் வெளிப்பாடாக மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர்கள் மற்றும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினர். வேந்தர் விருதுகள் லெட்டிஷியா நிம்ஸி (B.Tech. Biomedical Engineering),
, ஆரோன் ஆண்டே (B.Tech. Computer Science and Engineering Artificial Intelligence and Machine Learning) Con ஜோஷினா (M.Tech.VLSI Design) ஐவர்யா (M.Sc. Forensic Science),
(B.Sc. (Hons.) Agriculture) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, ஆர்.வேலுசாமியின் தலைமைத்துவத்தையும், சேவை களையும் பாராட்டி, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.



