fbpx
Homeபிற செய்திகள்கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் மாரத்தான், வாக்கத்தான் போட்டி

கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் மாரத்தான், வாக்கத்தான் போட்டி

இந்திய தொழில் கூட்டமைப்பு சங்க கூட்ட அரங்கில் சிஐஐ சேர்மன் பிரபு தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பெருமாள், யங் இந்தியா தலைவர் லோகேஷ், துணை தலைவர் சசிகுமார், சிஐஐ முன்னாள் தலைவர் மற்றும் 2030 விஷன் தலைவர் பாலசுப்பிரமணியம், கரூர் வர்த்தக சங்க செயலாளர் வெங்கட்ராமன், சிஐஐ கரூர் செயலாளர் பவித் ரன், விளையாட்டு சங்க பொறுப்பாளர்கள் சுரேஷ், முகமது கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது, கரூர் திருவள்ளுவர் மைதானத் தில் நவம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெறும் எனவும், இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பத்து கிலோமீட்டர் தூரம் மாரத்தான் போட்டியும் அதேபோல 5 கிலோமீட்டர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியும், 5 கிலோ மீட்டர் தொலைவு 8 முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் போட்டிகளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு வாக்கத்தான் போட்டிகள் நடை பெறும் எனவும் தெரிவிக் கப்பட்டது.

இந்த போட்டியில் வெல்லும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் கோப்பை சான்றிதழும், இரண்டாவது பரிசாக ரூபாய் 5000 கோப்பை சான்றிதழும், மூன்றாம் பரிசாக ரூ.3000 மற்றும் கோப்பை சான்றிதழும், நான்கு மற்றும் ஐந்தாவது பரிசாக கோப்பை மற்றும் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கரூரில் நடைபெறும் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி கருதி கரூர் விஷன் 2030 மாநாடு காலை 9 மணிக்கு கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் எனவும் இந்த நிகழ்வின் முக்கிய பிரிவுகளான யங் இந்தியா, இந்தியன் உமன் நெட் வொர்க் மற்றும் கரூர் டெக்ஸ்டைல் மேனுபேக்சர் அசோசியேசன் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தின் தற்போதைய ஏற்றுமதி இலக்கு 30 கோடியாக உள்ளதை 50 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img