கடலூர் தென் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரம் குறித்து வீடியோ கால் மூலம் அமைச்சரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பெஞ்ஜல் புயலால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த நீரை வடிய வைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து கரையோர பகுதி வீடுக ளுக்குள் தண்ணீர் புகுந் துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதைத்தொடர்ந்து பாதிக் கப்பட்ட பகுதிகளை தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ. மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் அனு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் கடலூர் முத்தையாநகர் பகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆய்வு செய்த போது, அவரிடம் தமி ழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போ னில் வீடியோ கால் மூலம் பேசினார்.
அப்போது, வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு பணியில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். எம்.எல்.ஏ.,மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அமைச்சர், பாதிப்பு விவரங்களை எடுத்துக்கூறி கலெக்டர் அலுவலகத்திற் குள்ளும் தண்ணீர் சென்று விட்டதாக தெரிவித்தார்.
அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் வீடியோ கால் மூலம் பேசி யதை, அங்கிருந்த பொதுமக்க ளிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் காண்பித்தார். அவர்களிடம், யாரும் அச்சப்பட வேண்டாம்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நட வடிக்கைகளும் அரசு எடுத்து வருகிறது. உங்க ளுக்கு தேவையான அனைத்து மீட்பு நடவடிக் கைகளையும் அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உள் ளிட்ட அனைவரும் செய்து தர உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
அமைச்சரிடம் பேசியதும், அருகில் இருந்த அய்யப்பன் எம்.எல்.ஏ.மேயர் சுந்த ரிரா ஜாவிடமும் வீடி யோ காலில் முதல்- அமைச் சர் மு.க.ஸ்டாலின் பேசி னார். இதையடுத்து தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டவெள்ளப் பெருக்கையும் முதல்- அமைச்சருக்கு வீடியோ கால் மூலம் அமைச்சர் காண்பித்தார்.தொடர்ந்து நிவாரண பணிகளை விரைந்து செயல்படுத்த அமைச்சருக்கு, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.