fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜே.பி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

கோவை ஜே.பி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு திருச்சி சாலையில் அமைந்துள்ள ஜே.பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம்ஆனந்த், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவமனை தலைவர் பிரபாகரன், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதில் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் சுதா, சேரன் கல்லூரி முதல்வர் மீனா குமாரி மாணவ மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது ஜே.பி மருத்துவமனையில் தொடங்கி 1.5 கிலோ மீட்டர் எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையில் முடிவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img