சென்னை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைப் பண்பாட்டுத்துறை சார்பாக இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் சங்ககிரி ஸ்ரீ பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஸ்ரீ பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களை 18 வருடங்களாக மிகச் சிறப்பாக நடத்தி வரும் தாளாளர் பி. மணியின் கல்வி சேவையை பாராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கவிதாலயம் ராமலிங்கம், ஆர்.எஸ். டிரேடர்ஸ் உரிமையாளர் மாரி தாஸ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் கலைவாணி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.



