fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தலைமை பண்பு பயிற்சி பட்டறை

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தலைமை பண்பு பயிற்சி பட்டறை

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் லயன்ஸ் சங்கம் சார்பாக நடைபெற்ற விருட்சம் தலைமைப் பண்பு பயிற்சி பட்டறையில் ஏராள மான மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கல்லூரி மாணவிகளின் தலைமை பண்பை வளர்க்கும் விதமாக பன் னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்ட ஆளுநர் நித்யானந்தம் அறிவுரையின் பேரில், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் விருட்சம் தலைமை பண்பு பயிற்சி பட்டறை ஜூலை மாதம் 18 மற்றும் 19 ந்தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

முன்னதாக ஜூலை 18 ந்தேதி முதல் நாள் பயிற்சி பட்டறையை, பன்னாட்டு லயன்ஸ் 324 சி அன்பு செய் ஆண்டின் முதலாம் துணை ஆளுநர் ராஜசேகர் துவக்கி வைத்தார்.

இதில், கல்லூரியின் 40 க்கும் மே ற்பட்ட துறைகளில் இருந்து கலந்து கொண்ட மாணவியர்களுக்கு, தலைமை பண்பு, ஆளுமை திறன், பிரச்னையை தனியாக நின்று எதிர் கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில், ஜி.எல்.டி. ஒருங்கிணைப் பாளர் லயன் ரவிசங்கர், லயன் ஜோசப், பேராசிரியர் லயன் சோபியா ரீனா, லயன் ஆனந்த குமாரி, லயன் சிந்தியா தம்பிதுரை, லயன் பிரபு ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளித்தனர்.

தொடர்ந்து ஜூலை 19 ந்தேதி பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்ட மகாகவி பாரதி மண்டல தலைவர் லயன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில், சிறப்பு அழைப்பா ளராக வட்டாரத் தலைவர் லயன் மோகன்ராஜ் கலந்து கொண்டார்.
விழாவை, பேராசிரியைகள் டாக்டர் திவ்யா, காவ்யா, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி லயன்ஸ் சங்க தலைவர் பிரசாந்தி, செயலாளர் ஹர்ஷனா, பொருளாளர் விஷ்மிதா, சர்வீஸ் கமிட்டி சேர் பர்சன் அஸ்வதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img