Homeபிற செய்திகள்லிலாக் ஹோட்டல் கும்பகோணத்தில் துவக்கம்

லிலாக் ஹோட்டல் கும்பகோணத்தில் துவக்கம்

தமாரா லீஷர் எக்ஸ்பீ ரியன்ஸ் நிறுவனத்தின் லிலாக் ஹோட்டல் கோவில் நகரமான கும்ப கோணத்தில் துவக்கம் தமாரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனம், கும்பகோணத்தில் பிரமாண் டமான ஹோட்டலை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தமாராவின் 3 வது ஹோட்டல் இது ஆகும் . 188 கோயில்களுக்கு பெயர் பெற்ற கும்பகோணம் விருந்தினர்களுக்கு அமைதியான மற்றும் கலாச்சார ரீதியான அமைப்புடன் கூடிய சூழலை விருந்தினர்களுக்கு வழங்குகிறது.

கும்பகோணத்தில் இந்த புதிய ஹோட்டலை தாமரா லீஷர் எக்ஸ் பீரியன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான ஸ்ருதி ஷிபுலால் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். தொடர்ந்து ஹோட்டல் மேலாளர் வி.உன்னி கிருஷ்ணன் ஹோட்டலின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

குறைந்த விலையில் பிரமாண்ட விருந்தோம்பல் அனுபவங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

வெளியீட்டு விழாவில் ஸ்ருதி ஷிபுலால் கூறுகையில், “கும்பகோணத்தில் எங்கள் லிலாக் ஹோட்டலானது அனைத்து தரப்பு மக்களும் அணுகும் வகையில் கோவில் தலங்கள் மற்றும் வரலாற்றுத் தலங்களுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் குழுக்களுக்கு ஏற்றதாக இது அமையும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img