fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சி கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகையின் சிறப்புகளையும் தனித்தன்மையும் எடுத்துரைக்கும் விதத்தில் இருந்தது.

இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கேரளாவின் பாரம்பரிய உடையணிந்து பங்கு பெற்றதுடன், பூக்கோலமிட்டும் கேரள பாரம்பரிய நடனமாடியும் மகாபலி வேடமிட்டும் விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img