2023-24 ம் கல்வியாண்டில் மேட்டுப்பாளையம் வட்டார அளவில் மாணவர்களுக்கான குறுமையப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மேட்டுப்பாளையம் நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 21.08.2023 அன்று முதல் 24.08.23 அன்று வரை பூப்பந்து ( 14 – 17) வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் எரிபந்து (17) வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் கால்பந்து (17) வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் போட்டிகள் நடந்தது. காரமடை அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் திருசெல்வி தலைமையில் நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜப்பன் முன்னிலையிலும் மற்றும் இதர உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் வழிகாட்டுதலிலும் இறுதிச்சுற்று நடத்தப்பட்டு நேற்றுடன் நிறைவுபெற்றது. பூப்பந்து போட்டியில் நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
அதன் விபரம்: 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் முதலிடம். 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் முதலிடம். 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களையும் அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



