Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரி - பைரோபரஸ் டெக்னாலஜி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கேபிஆர் கல்லூரி – பைரோபரஸ் டெக்னாலஜி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் சிறந்த தொழில் மையத்தை நிறுவவும், சமீபத்திய தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்பு மற்றும் FDP போன்றவற்றில் பயிற்சி அளிப்பதற்காகவும், சென்னை, பைரோபரஸ் டெக்னாலஜிஸ் (Pyroferus Technologies) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வேலைவாய்ப்பு மைய இயக்குநர் முனைவர் பி.தாமரைக்கண்ணன் வரவேற்றார். கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கீதா தலைமை வகித்தார்.

ஏவிபி டெக்னாலஜி

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் முதல்வர் முனைவர் பி.கீதாவும், Pyroferus Technologies சார்பில் ஏவிபி டெக்னாலஜி சோமசுந்தர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும், மாணவர்களின் வாழ்க்கை மற்றும் தொழில் நலனுக்காக தாங்கள் அளிக்கப் போகும் பயிற்சியையும் சோமசுந்தர் விளக்கினார்.

படிக்க வேண்டும்

spot_img