சிறு தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை ஆரோக்கியம் தரும் அற்புதமான உணவுகள்.
இவற்றில் முக்கியமான அமினோ அமிலங்கள் அதன் ஊட்டச்சத்து மதிப்பை மேலும் அதிகரிக்கின்றன என்றார் என்ஐஆர்சிஏ துறைத் தலைவர் டாக்டர் மணிவேல்.
என்ஐஆர்சிஏ, – ஜிஓஐ இணைந்து துவக்கி உள்ள சிறுதானிய வர்த்தக சபை தலைவராக டாக்டர் சேவாக் விஜய் பதவி ஏற்றார்.
இந்நிகழ்ச்சியில் என்ஐஆர்சிஏ துறைத் தலைவர் டாக்டர் மணி வேல் பேசியதாவது:
மத்திய அரசு டாக்டர் சேவாக் விஜய் தலைமையில் இயற்கை மருத்துவம் மற்றும் தயாரிப்பு தொழில்முனைவு மற்றும் வேளாண் கூட்டுறவு போன்ற கள நடவடிக்கை திட்டங்களுக் கான உயர்மட்டக் குழுவை உருவாக்கியுள்ளது.
தற்போது புதிதாக துவங்கப்பட்ட இந்த சபை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடித் தரக்கூடிய வேளாண் கூட்டுறவு மாதிரிகளில் அதிக கவனம் செலுத்தும்.
இந்த முன்முயற்சியானது இளைஞர்களுக்கு நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருவதோடு, அவர்கள் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும்.
கூட்டுறவின் மதிப்பு மற்றும் அதன் கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு சொந்த நிறுவனங்களை துவக்குவதாக இன்றைய இளைஞர்கள் கூறி வருகிறார்கள்.
ஒரு விவசாய கூட்டுறவு மாதிரியானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, எளிதான முறையில் அவர்கள் சுயதொழில் துவங் குவதற்கும் துணை நிற்கிறது. அது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கும் மற்றும் அனைத்து படித்த இளைஞர்களுக்கும், திறமைசாலிகளுக்கும், வேலைகளை தேடிக் கொண்டிருக்கும் சமீபத்திய பட்டதாரி இளைஞர்களுக்கும் உறு துணையாக இருக்கும்.
விவசாயத் துறை வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் விதமாக என்ஐஆர்சிஏ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டுதான் தற்போது தமிழ்நாட்டில் சிறுதானிய வர்த்தக சபை துவக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பரிந்துரையை ஏற்று ஐ.நா. சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இந்நிலையில் 72 நாடுகளின் ஆதரவுடன் இந்தியாவை சிறுதானியங்களுக்கான உலக ளாவிய மையமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அற்புதமான சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை என்ஐஆர்சிஏ ஏற்படுத்தி வருவது குறித்து பெருமையாக உள்ளது. சிறு தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக் கள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை ஆரோக்கியம் தரும் அற்புதமான உணவுகளாகக் கருதப்படுகின்றன.
தற்போது நவீன யுகத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறை மாறியுள்ள சூழலில் இந்த உணவுகள் பல நோய்களை எதிர்த்து போராடும் வல்லமை பெற்றவையாக உள்ளன என்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்திருக்கிறது.
இவற்றில் உள்ள முக்கியமான அமினோ அமிலங்கள் அதன் ஊட்டச்சத்து மதிப்பை மேலும் அதிகரிக்கின்றன. இருப்பினும், இவற்றில் காணப்படும் உயிர்வேதியியல் ரசாயனங்களின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவத் திறன் குறித்து பெரிய அளவில் ஆய்வு செய்யப்படவில்லை.
இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படையில் அவை இருதய ஆபத்து, நீரிழிவு, முதுமை மற்றும் புற்றுநோயை வெகுவாக குறைக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுக ளாக இந்திய உணவுகளில் சிறு தானியங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அவை நமது உணவு முறைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.
அது குறித்து மதம் சார்ந்த பல்வேறு பழங்கால நூல்களிலும் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் விவசாயிக ளிடம் பேசும்போது, அந்தக் காலக்கட்டத்தில் என்ன மாதிரி உணவுகளை அவர்கள் எடுத் துக் கொண்டனர் என்பது குறித்து தெரிய வரும்.
இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத் தவரை பசுமைப் புரட்சிக்கு முன்னர் பெரும்பாலான வீடுகளில் முக்கிய உணவாக சிறுதானியங்கள் இருந்தன. மத்திய அரசு கடந்த ஆண்டு சிறுதானிய புதிய கண்டுபிடிப்பு சவாலை துவக்கியது.
இது, சிறு தானியங்கள் உற்பத்தியில் உள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான தீர்வுகளை கண்டறிய இளைஞர்களை வெகுவாக ஊக்குவிக்கும் என்றார்.



