fbpx
Homeபிற செய்திகள்கரூரில் சமுதாய வளைகாப்பு வளையல் அணிவித்த எம்.எல்.ஏ.

கரூரில் சமுதாய வளைகாப்பு வளையல் அணிவித்த எம்.எல்.ஏ.

கரூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பி ணிகளுக்கு வளையல் அணிவித்து மங்களப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டு மகாதானபுரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த, குழந் தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

தலைமை தாங்கி எம் எல் ஏ சிவ காமசுந்தரி பேசும்போது,
இயல்பாக ஒவ்வொரு பெண்களுக் கும் கர்ப்பிணி காலத்தின்போது அவரது தாயார் வீட்டில் இது போன்ற சீமந்தம் செய்யப்படுவது வழக்கம்.

தமிழக அரசு மகளிருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டமாக இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார்.

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார், பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், கரூர் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் அம்பிகாபதி, கிருஷ் ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமித்ரா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img