Homeபிற செய்திகள்போட்டோ கிராபர் சங்கத்தின் சார்பில் குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு பாராட்டு விழா

போட்டோ கிராபர் சங்கத்தின் சார்பில் குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு பாராட்டு விழா

குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு பாராட்டு விழாவும், திரையிடல் நிகழ்வும், உடுமலை போட்டோ கிராபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதற்கு போட்டோ கிராபர் சங்கத்தின் தலைவர் எம்.பிரகாஷ் தலைமை வகித்தார். கல்லூரி மாணவி அறிவரசி வரவேற்புரை பேசினார். சங்கத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

உடுமலை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர் வேல்விழி கோவிந்தராஜ், தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் மூர்த்தீஸ்வரி, மாணவர்கள் அர்சினா அசன், முஹமதுல் ஹசன் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நாகமாணிக்கம், சவுண்டப்பன், ராஜேந்திரன் ஆகியோரும் வாழ்த்துரை பேசினர்.

வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முனைவர் மதியழகன், பாலகிருஷ்ணன் ஆகி யோரும் பேசினர். இதில் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி இந்த திரைப்படத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது போன்று வைத்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது என்றார்.

இயக்குநர் கமலக்கண்ணன் ஏற்புரையில் குழந்தைகள் குறித்தான அச்ச உணர்வை குறித்து பேசினார்.

தொடர்ந்து கமலக் கண்ணன், தயாரிப்பாளர் சவிதா சண்கமுகம், நடிப்பு பயிற்சியாளர் நந்தகுமார் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img