கொங்குநாடு மருத்துவமனையின் நடமாடும் பேருந்து கிளினிக் மருத்துவ முகாம் கோவை வெள்ளகிணறு ஆதி அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம் முகாமினை வி.வி. குணசேகர தண்டபாணி, வெள்ளக்கிணர் விசிபி பண்ணை வி.எஸ். சிவசுப்பிரமணியம், வெள்ளக்கிணர் வி.கே. ரைஸ் மில் & கைலை சிவசக்தி ஸ்பின்னர்ஸ் என்ஜினியர் கே.விஸ்வநாதன், விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக இயக்குனர் துவக்கி வைத்தனர்.
இம் முகாமிற்கு கொங்கு நாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.ராஜு முன் னிலை வகித்து, சிறப்பு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் கொங்குநாடு மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சதாசிவம், மகப்பேறு மருத்துவர் மேக்னா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் இணைந்து முகாமை நடத்தினர். பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த இலவச நடமாடும் பேருந்து கிளினிக்கில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே சிறுநீரக பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமிற்கு வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வ விநாயகர் மூர்த்தி, சிவசாமி, காளிமுத்து, நளராஜன், ராமசாமி, விஜயகுமார், காளியப்பன், மோகனசுந்தரம் மற்றும் ஆதி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



