கோவை கோபாலபுரம் 3-வது வீதி ,எண் 53 என்ற முகவரியில் கோவையின் பிரபல வழக்கறிஞரும் கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை அமைப்பாளருமான டி.கார்த்திக் பிரபுவின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக்கழக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கே.விக்னேஷ் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
விழாவில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிரீஷ், தொண்டரணி அமைப்பாளர் பாலாஜி, பொருளாளர் சதீஷ் , மாவட்ட இளைஞரணி சேர்ந்த கருப்புசாமி, மதுக்கரை ஒன்றியத்தைச் சேர்ந்த டிமிட்ரோ,சிவா, கார்த்தி, கிணத்துக்கடவு ஒன்றிய பழனிசாமி, மாவட்ட இளைஞரணி ரவி ,சௌந்தர்யா, மாவட்ட இணையதள பாலாஜி, பிரபு டேனியல் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து
கொண்டனர்.



