fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி 100 வார்டு தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி 100 வார்டு தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி 100 வார்டு தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவை பூ மார்க்கெட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தூய்மை பணி மேற்பார்வையாளர் கோவை கபீர் வரவேற்றார்.

தூய்மைப் பணி மேற்பார்வையாளர் முருகேஷ் தலைமை வகித்தார். தூய்மைப்பணி மேற்பரப்பு மேற்பார்வையாளர்கள் நாகராஜ், காளியப்பன், மாசிலாமணி, ஜெயசீலன், ஐயப்பன், முருகேஷ், மணிகண்டன், முருகன், சிவக்குமார், தமிழரசு, வடிவேல், சசிகுமார், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அரசினால் அறிவிப்புகளைச் செய்து நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை பட்டியல் இட்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.


மேலும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மீதும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மீதும் சில அதிகாரிகள் தவறான தகவல்களை அளிப்பதனால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் பணிகால அடிப்படையில் நிரந்தர தூய்மைப்பணி மேற்பார்வையாளராக பணி மாற்றம் செய்ய வேண்டும், பணி கால அடிப்படையில் சுகாதார மேற்பார்வையாளர்களை சுகாதார ஆய்வாளர்களாக பணி உயர்வு செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் தூய்மைப்பணி மேற்பார்வையாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img