fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி- கோவை மார்க்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி- கோவை மார்க்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் பிரபலமாக இயங்கி வரும் மார்க்ஸ் நிறுவனமும் பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கொங்கு ஐடிஐ நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். புரிந்துணர்வு ஆணையை மாக்ஸ் நிறுவனத்தின் துணை மேலாளர் எஸ்.எஸ்.சங்கர் கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாசலத்திடம் வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு முன்னேற்பாடான செயல்பாடாகும்.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மேஜர். பி.ராகவேந்திரன், கொங்கு ஐடிஐ முதல்வர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் செந்தில்குமார், மார்க்ஸ் நிறுவனத்தின் பயிற்சி அலுவலர் திரு சுப்பிரமணியம் கலந்து கொண்டனர். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சென்னியப்பன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img