fbpx
Homeபிற செய்திகள்செப்.27ம் தேதி ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிப்பு

செப்.27ம் தேதி ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிப்பு

உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நேச்சுரல்ஸ் சலூன் உடன் இணைந்து ஐரிஸ் ஈவன்ட்ஸ் நடத்தும் ‘ஐரிஸ் பேஸ் ஆப் சென்னை 2025’ மற்றும் ‘ஐரிஸ் பேஸ் ஆப் தமிழ்நாடு 2025’ நிகழ்ச்சிகளுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஜிஆர்டி ஓட்டலில் நடைபெற்றது.
இதில் பேஷன், திரைப்படம் மற்றும் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், ஐரிஸ் பிராண்டின் ஸ்பான்சர்கள், நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் சி.கே. குமாரவேல், நிறுவனர் டாக்டர் வீணா குமாரவேல், ஜிஆர்டி ஓட்டல்ஸ் அன்ட் ரிசார்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் கோட்டா, சுல்தான் ஜெம்ஸ் – டயமண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சுல்தான் மொஹிதீன், டபிள்டிஜிட்டல் அன்ட் பன் ப்ளட்டர் ஜாம் நிறுவனர் ஏ.எஸ். முருகவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியை முதன்மை பங்குதாரரான நேச்சுரல்ஸ் சலூன், ஹோஸ்டிங் பங்குதாரராக ஜிஆர்டி அன்ட் ராடிசன் ப்ளூ, டிஜிட்டல் பிராண்டிங் பங்குதாரராக பன் ப்ளட்டர் ஜாம், புகைப்பட பங்குதாரராக சென்னை விசுவலைட் அகாடமி, அறிவு பங்குதாரராக சென்னை மற்றும் கோழிக்கோட்டில் உள்ள ஆண்ட்வே ஸ்கூல் ஆப் டிசைன், பேஷன் மற்றும் ஆடை பங்குதாரராக ஹபிப்தி- பேஷன் பார் லைப், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, ஷபானா அன்ட் டி பியூசால் பாஷியானா – தி ஜென்டில் மேன்ஸ் தியரி, நிகழ்ச்சிக்கான பங்குதாரராக என்சான்டட் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் கருத்தாக்க பங்குதாரராக ஐரிஸ் ஈவன்ட்ஸ் ஆகியவை இணைந்து நடத்த உள்ளன.

இந்த ஆண்டு 25வது ஆண்டாக, தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் 18 முதல் 29 வயது வரையிலான மிஸ் – மிஸ்டர் மற்றும் 50 வயது வரையிலான திருமணமான பெண்களுக்கும் ஆடிஷன்கள் நடத்தப்படும். இறுதிப் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜிஆர்டி இன் ரேடிசன் ப்ளூ ஓட்டலில் நடைபெறும்.
இது குறித்து ஐரிஸ் ஈவன்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி டாக்டர் லதா ஏ. கிருஷ்ணா கூறுகையில்,
“இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் நடைபெற இருப்பதால், 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img