இராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 வது நாளாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கினார்.
இராணிப்பேட்டை நகராட்சி, திமிரி ஒன்றியம் தாமரைப்பாக்கம், ஆற்காடு நகராட்சி, வாலாஜா நகராட்சி, நெமிலி பேரூராட்சி ஆகிய 5 பகுதிகளில் நடை பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், முகாமிற்கு பொதுமக்கள் கொண்டுவரும் மனுக்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து துறைச் சார்ந்த அலுவலர்களிடம் தகுதியான மனுக்களா? என்பது ஆராய்ந்து உடனடி தீர்வு காண கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஆற்காடு எம். எல். ஏ.ஈஸ்வரப்பன் சோளிங்கர் எம். எல். ஏ. ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாம்களில் வருவாய்த் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பட்டா ஆணைகளையும், மின்சார துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மின்சார பெயர் மாற்றத்திற்கான ஆணைகள், 5 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகள், 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 5 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் நகரமன்றத் தலைவர்கள் இராணிப்பேட்டை சுஜாதா வினோத், வாலாஜாப்பேட்டை ஹரிணி தில்லை, ஆற்காடு தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் நெமிலி வடிவேலு, திமிரி அசோக், வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன், வட்டாட்சியர்கள் ஆனந்தன், செல்வி.மகாலட்சுமி, ராஜலட்சுமி, நகராட்சி ஆணையாளர்கள் வாலாஜாப்பேட்டை இளையராணி, இராணிப்பேட்டை ப்ரீத்தி மற்றும் பலர் கலந்து கலந்துகொண்டனர்.



