கர்ப்பப்பை பிரச்சினைக்கு எளிய முறையில் குறைந்த செலவில் தீர்வு காண கே.எம்.சி.எச். மருத்து வமனை சார்பில் இன்று (ஆக.7) முதல் வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்துகிறது.
பியூபிராய்ட் (Fibroid) கட்டியில் இருந்து கர்ப்பப்பையை பாதுகாக்க எளிய சிகிச்சை. கர்ப்பப்பை கட்டி ஆபத்து இல்லை தான்… ஆனா லும் தொந்தரவு தான்ஞ்
எளிய சிகிச்சை செய்து சரி செய்து கொண்டால், சிரமங்களை தவிர்க்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் எந்த சாதாரண விஷயமாக இருந்தாலும் அலட்சியப்படுத்தி விடக் கூடாது.
மாதவிடாய் காலங்களில் சிலருக்கு அதிக வலி ஏற்படும்.
அதிகளவில் உதிரப் போக்கு இருக்கும். இது சாதாரண விஷயம் தானே என அலட்சியம் கூடாது. ஏதேனும் சிக்கல் இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பதில் சிரமம், அடிவயிற்றில் எப்போதும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருத்தல் போன்றவையும் கூட கர்ப்பப்பை கட்டி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
கர்ப்பப்பை கட்டி (Fibroid) என்பது, பெண்களுக்கு சாதார ணமாக காணப்படும் ஒரு ஆபத்து இல்லாத கட்டி. இது சாதாரண கட்டி தானே என அலட்சியப்படுத்தினால், கர்ப்பப் பபையைக் கூட அகற்றப்பட வேண் டிய கட்டாயம் ஏற்படும்.
எனவே, சிறிய பிரச்சினை இருந்தாலும், அதை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் எவ்வித நோயும் இல்லாமல் நலமு டன் ஆரோக்கியமாக வாழலாம்.
கர்ப்பப்பையில் ஏதாவது பிரச்னை என்றால், அதனை அகற்றி விடலாம் என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் அவசியமானவை. எளிதாக குணப்படுத்தக்கூடிய இந்த கட்டியை, தழும்புகள் இல்லாமல், சிகிச்சை செய்த சுவடே இல்லாமல், ஆஞ்சியோகிராம் முறையில் குணப்படுத்த முடியும்.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அதிநவீன முறையில் சிகிச்சைக்கான கருவிகள் உள்ளன. எளிமையான முறையில், சிகிச்சை செய்து உடல் நலத்துடன் வாழலாம்.
ஆலோசனை
பரிசோதனையின்போது கர்ப்பப்பை கட்டி இருப்பது கண் டறியப்பட்டால், தகுந்தசிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர். இதற்கும் கட்டண சலுகை உண்டு. வழக் கமான அறுவை சிகிச்சைக்கு பதிலாக, இந்த கட்டிக்கு நவீன தழும்பு இல்லாத சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவனையில் உள்ள கதிர் வீச்சியல் துறையில் ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 2 வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் பரிசோதனையை சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம். டாக்டர்கள் தக்க ஆலோசனைகளை மேற்கொள்ள விருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் காலை 9 முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் பரிசோதனை முகாம் இருக்காது. விபரங்களுக்கு மற்றும் முன்பதிவுக்கு: 733 9333 485.
இவ்வாறு கேஎம்சிஎச் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.