fbpx
Homeபிற செய்திகள்99 பைசா வட்டியில் தங்க நகைக் கடன் ஐ.ஐ.எஃப்.எல். பைனான்ஸ் சிறப்புத் திட்டம்

99 பைசா வட்டியில் தங்க நகைக் கடன் ஐ.ஐ.எஃப்.எல். பைனான்ஸ் சிறப்புத் திட்டம்

ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தங்கநகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக மிகக் குறைந்த வட்டி விகிதத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்முனைவோர் மற்றும் கடன் வாங்குபவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மறைமுக கட்டணங்கள் எதுவுமில்லாமல் மாதத்திற்கு 99 பைசா வட்டியில் தங்கநகைக் கடனை ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் வழங்குகிறது.

ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் இந்தியா முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது, இது 85 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையா ளர்களுக்கு சேவை செய்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகைக் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஐ.ஐ.எஃப்.எல் பைனான் ஸும் ஒன்றாகும், இது ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்றது. ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் தங்கநகைக் கடன்களுக்கான தமிழ்நாடு மண்டல

வணிகத் தலைவர் டி.ஜி கார்த்திக் கூறியதாவது:
ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் இந்தியா முழுவதும் உள்ள வங்கி கணக்கு வைத்திராத மற்றும் குறைந்தளவே வங்கி வசதி உள்ள இடங்களில் இருக்கும் கடன் பெறுபவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
ரூ.68,178 கோடி கடன் சொத்துக்களை நிர்வகிக்கிறது.

ஜூன் 30, 2023 முடிவில், ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தங்கநகைக் கடன் ரூ.22,142 கோடியாக இருந்தது.

இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 29% வளர்ச்சியாகும். 22 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,474 சிறுநகரங்கள் / நகரங்களில் பரந்த அளவில் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ (MSME) வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு தங்கநகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img