டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை யின் பதவியேற்பு விழா நடந்தது.உறுப்பினர்களுக்கு பேட்ஜ் வழங்கப் பட்டு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
கோவை கேஎம்சிஎச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் டீன் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் ஆர்.ரவிக்குமார், சிறப்புச் சொற் பொழிவு ஆற்றினார்.
கல்வி நிறுவனத்தின் செயலாளர் தவமணி டி. பழனிசாமி, சிறப்பு விருந்தினரும், தலைவர்களுக்கு பேட்ஜை வழங்கி ஊக்கப்படுத்தினர்.
இயக்குநர் டாக்டர் பி.ஆர்.முத்துசுவாமி, செயலாளர் மதுரா வி.பழனிசாமி, இயக்குநர் டாக்டர் எஸ்.சரவணன், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கல்லூரி நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் ஆசிரியர்கள் புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட தலைவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.