பிசிக்ஸ் சோலார் நிறுவனம் ஸ்விட்சிங் பேட்டரி இன்க் உடன் இணைந்து கினிமேடிக் சார்ஜர் கேசி5வி அறிமுகத்துடன் அதன் புதிய சிங்கா தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த புதுமையான சார்ஜர், குறைந்த விலையில் சுத்தமான எரிசக்திக்கான ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 7க்கு பங்களிக்கும் வகையில், குறைந்த சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களை இயக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. இதை தமிழக அமைச்சர் திரு.மெய்யநாதன் சிவா.வி. சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
இது வெறும் 90 நிமிடங்களில் சோலார் பேனலைப் பயன்படுத்தி முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய ஸ்மார்ட்போனை கற்பனை செய்து பாருங்கள். இது தற்போது ‘கினிமேடிக் கேசி5வி’ சார்ஜரால் நனவாக உள்ளது.
இது குறித்து ஸ்விட்சிங் பேட்டரி இன்க் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கண்ணப்பன் செட்டியார் கூறுகையில், “எங்களின் சிறிய சிப், பெரிய மற்றும் விலையுயர்ந்த எம்பிபிடி சோலார் சார்ஜ் கன்ட்ரோலர்களின் தேவையை நீக்கி, ஸ்மார்ட்போன்களுக்கு சோலார் சார்ஜ் செய்வதை சாத்தியமாக்குகிறது “ என்றார்.