Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

ராணிப்பேட்டையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா வாழ்ந்து காட்டுவோம் திட்ட துறையின் சார்பில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற்று சுயதொழில் செய்து வருபவர்களை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,  விவரித்தார்.

கடந்த டிசம்பர் 2022ம் மாதத்தில் சுயதொழில் செய்திட உதயம் செயலியில் பதிவேற்றம் செய்து கடன் உதவி ரூ.5 லட்சம் பெற்று 

தொழில் செய்து வரும் பயனாளியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு தொழில் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது பயனாளி, இத்திட்டத்தின் மூலம் எனக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. நன்றாக தொழில் செய்து வருகிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தார்கள். 

தொடர்ந்து ஆட்சியர் தொழிலை விரிவுபடுத்திட தேவையான உதவிகள் வழங்கப்படும். நன்றாக தொழில் செய்ய வேண்டுமென  தெரிவித்தார்கள்.

பின்னர், ஐம்பு குளம் ஊராட்சியில் கிராம வறுமைக் குறைப்புக் குழு உருவாக்கம் (VPRC) கட்டிடத்தில ரோஜா மகளிர் சுயஉதவிக் குழுவைச் சார்ந்த 20 பெண்கள் இணைந்து சுய தொழிலாக LED Recharge Bulb தயாரிக்கும் பணியினை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, செய்தியாளர்களுக்கு விவரித்தார்கள்.

அப்போது மகளிர் சுயஉதவிக்குழுவைச் சார்ந்த பெண்கள்

இந்த திட்டம் எங்களை ஊக்கப்படுத்துகிறது. எங்களுக்கு இதை மார்க்கெட்டிங் செய்ய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் அதிக கடன் உதவி கிடைக்கப் பெற்றால் LED பல்ப் தயாரிக்க தேவையான உபகரணங்களை வாங்க உதவியாக இருக்கும் என குழு பெண்கள் தெரிவித்தனர். 

தொடர்ந்து நன்றாக செய்யுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்கள். 

இதனையடுத்து, இவர்களுக்கு TN Rise என்ற திட்டத்தின் மூலம் கூட்டுக் கடன் உதவி பெற்று வழங்கிட நடவடிக்கைகள் இருந்து வருகிறது என வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குனர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின் பொழுது வாழ்ந்து காட்டுவோம் திட்ட துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், இளம் வல்லுனர் சவிதா, திட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img