தகவல் தொழில்நுட்ப சேவை களில் உலகில் முன்னணி நிறுவன மான டாடா கன்சல்டன்சி சர் வீசஸின் (டிசிஎஸ்) ஐந்தாயிரம் ஊழியர்கள், ரத்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களின் உணர்வைப் போற்றும் வகையில், தமிழகத்தின் முன்னணி பல்நோக்கு சங்கிலி தொடர் மருத்துவ குழுமமான சென்னை காவேரி மருத்துவமனை, அவர்களுக்காக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் புற்றுநோய் குறித்து அறிந்து கொள்வதற்கும், பொதுமக்களிடம் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..
ரத்த புற்றுநோய்கள் கடுமை யான மற்றும் நாள்பட்டது என இரண்டு வகைகளாகும். முந்தை யது குறுகிய காலத்திற்குள் தோன்றும். பிந்தையவற்றுடன் ஒப்பிடும்போது கடுமையான போக்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது பரிசோதனையின் போது தெரியவருகிறது. இது நாட்டின் மொத்த புற்று நோய்களில் 8விழுக்காடு ஆகும். ரத்தப் புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் பொதுவானவை; இருப்பினும் சில புற்றுநோய்கள் வித்தியாசமாக இருக்கலாம்.
எலும்பு காயம் அல்லது காய்ச்சல், அல்லது `ஹீமோகுளோபின் அல்லது தட்ட ணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுதல் ஆகியை அந்த அறிகுறிகள் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு உடல் பரிசோதனை செய்யும்போது 4 லட்சம் குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.
விழிப்புணர்வு ஓட்டம்
ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குழந்தைகளை புற்றுநோயில் இருந்து குணப்படுத்தமுடியும். “சமீப காலமாக புற்றுநோய் சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
எனவே தான் ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை செய்துகொள் ளுமாறு பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் இளம் பெற்றோர்களாக இருக்கும் இளைஞர்களை ஈர்க்கின்றன. எனவே தான் டிசிஎஸ் நிறுவனத்திற்காக இந்த ரத்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தினோம்.
விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ள புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு இந்த தகவலை எடுத்துச் செல்வதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறோம்,” என சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் தெரிவித்தார்.