இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் புதுப்பொலிவுடன் எம்ஏஆர்20எக்ஸ் ஷோரூமை திறந்துள்ளது.
எம்ஏஆர்20எக்ஸ் ஷோரூம் விசேஷமாக எம்ஏஆர்20எக்ஸ் ஈக்யூ மாடல்களை காட்சிப்படுத்துவது மட்டுமின்றி உயர்ரக வாகனங்களுக்கான ஷோரூமாகவும் விளங்குகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் லான்ஸ் பென்னட், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரத் விஜயராகவன் ஆகியோர் எம்ஏஆர்20எக்ஸ் ஷோரூமைத் திறந்து வைத்தனர்.
‘தமிழகத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சியடைகிறோம். கோவையில் இந்த டி.இ.வி (TEV) செக்மெண்ட், வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில் விசேஷமாக உயர் ரக வாகனங்கள் மற்றும் ஈக்யூ கார்களுக்கு என தனித்தனிப் பகுதிகள் உள்ளன. எதிர்காலத்தில் ஒரு முன்னணி ஆடம்பர கார் சந்தையாக தமிழகம் மாறுவதற்கான வாய்ப்புகள் குறித்து மிகவும் நம்பிக் கையுடன் இருக்கிறோம்’ என்றனர்.
லான்ஸ் பென்னட் – மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் ‘உலகெங்கிலும் உள்ளவர் களால் மிகவும் விரும்பப்படும் வாகன பிராண்டான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உடனான எங்கள் நீண்டகால உறவு குறித்து மிகவும் பெருமையடைகிறோம்.
கோவையில் எம்ஏஆர்20எக்ஸ் ஷோரூம் மூலம் வாடிக் கையாளர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரத் விஜயராகவன், இந்த ஷோரூமில் ஸ்டேஜ் கார் டிஸ்பிளே, ஸ்டேஜ் வால் மற்றும் சீரிஸ் கார் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன.
இந்த ஷோரூமில் ஆக்ஸசரீஸ் மற்றும் கலெஷன்ஸ், எம்ஏஆர்20எக்ஸ் உபசரிப்பு கவுண்டர், தனிப்பட்ட வகையிலும் மற்றும் சில சமயங்களில் கூடியும் பேசுவதற்கான இடங்கள் என தனித்தனி பகுதிகள் உள்ளன என்றார்.
2022-ம் ஆண்டில், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம், கோவையில் முதல் முறையாக ஈச்சனாரியில் வாடிக்கையாளர் சேவை வசதியை விரிவு படுத்தியுள்ளது.