fbpx
Homeபிற செய்திகள்குமரகுரு கல்லூரி வளாகத்தில் உற்சாகமூட்டிய ‘யுகம்’ நிகழ்வுகள்- ரொக்கப்பரிசை அள்ளிய மாணவர்கள்

குமரகுரு கல்லூரி வளாகத்தில் உற்சாகமூட்டிய ‘யுகம்’ நிகழ்வுகள்- ரொக்கப்பரிசை அள்ளிய மாணவர்கள்

யுகம் 2023 மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான உற்சாகமூட்டும் நிகழ்வுகள், சுவாரஸ்யமான பட்டறைகள் மற்றும் பல்துறை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும்.

இத்தொழில்நுட்ப -கலாச்சார திருவிழாவின் மூன்றாவது நாள் (மார்ச் 4) பல்வேறு வகையான பார்வையாளர்களை கவர்ந் தது. 40+ நிகழ்வுகளின் மத்தியில் ஆர்.சி எக்ஸ்ட்ரீம் மற்றும் டெக் எக்ஸ்போ ஆகியவை முக்கிய நிகழ்வுகளில் அடங்கும்.

ஆர்.சி.எக்ஸ்ட்ரீம்

குமரகுரு வளாகத்தின் ஆர்.சி.டிராக்கில் நடத்த ப்பட்ட ஆர்.சி.எக்ஸ்ட்ரீம், ஒரு சோதனையில் ஈடு பட வேண்டும் என்ற உந்துதல், வாய்ப்புகளை எடுக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் வெற்றி பெறுவதற்கான உத்வேகம் ஆகியவற்றைத் தூண்டியது. இது கன்ட்ரோலர் மற்றும் காரை உள்ளடக்கிய நிகழ்வு.

மேலும் பந்தயக் கட்டுப் பாட்டாளர்கள் வெற்றி பெற போட்டியிட் டதால் மிகுந்த உணர்ச்சிக ளைக் கொண் டிருந்தது.பங்கேற்பாளர்கள், தென் னிந்தியாவின் முக்கிய ரேஸ் டிராக்குகளில் ஒன்றில், இது போன்ற பந்தயத்தைக் காணவும் போட்டியிடவும் இருந்தனர்.

அண்ணா பல்க லைக்கழகத்திலிருந்து அரவிந்த், வேலம்மாள் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் பண்ணாரியம்மன் கல்லூ ரியைச் சேர்ந்த விஜய் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

வெற்றியாளர்களின் விடா முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், 40,000/- ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.இதனு டன், டெக் எக்ஸ்போ 2023 இன்றைய சவால்க ளுக்கு பதிலளிக்கும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களில் வளர்ந்து வரும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பானது.

இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் முன்மாதிரிகள் அல்லது கருத்துகளின் ஆதாரத்தை பல்வேறு தொழில்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு காண்பிக்க ஒரு தனித் துவமான தளத்தை கொண்டு வந்தது. செயற்கை நுண்ணறிவு, வேளாண் தொழில்நுட்பம், ஹெல்த் டெக், ஸ்மா ர்ட் சிட்டி மற்றும் உள் கட்டமைப்பு மற்றும் மின்சார மற்றும் ஹைபிரிட்வாகனங்கள் ஆகியவை கண்டு பிடிப்புகளின் முக்கிய பிரிவுகளாகும்.

பிர ஜி, கார்த்தி ஆர்.வி மற் றும் லுகிதா டி.எம் ஆகி யோரைக் கொண்ட பண் ணாரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் எலக்ட் ரோ-டெக்கிகள் குழு வெற்றியாளர்களாகவும், கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற் றும் டெக்னாலஜியைச் சேர்ந்த யுவேரா அணியின் லலித் கே, வருண் பி.ஆர், லெவின் ஜோசப், உதயத ரணிஷ்பி ஆகியோர் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். அவர்களின் படைப்புகள் பாராட்டப் பட்டு 50,000/- ரொக்கப் பரிசுகளும் வழங்கப் பட்டன.

படிக்க வேண்டும்

spot_img