fbpx
Homeபிற செய்திகள்2 புதிய உலக சாதனைகள் படைத்த கரூர் பள்ளி 2ம் வகுப்பு மாணவன்

2 புதிய உலக சாதனைகள் படைத்த கரூர் பள்ளி 2ம் வகுப்பு மாணவன்

கரூரில் 2-ம் வகுப்பு பள்ளி மாணவன் உலகின் மிகப் பெரிய ஆங்கில வார்த்தை மற்றும் தமிழ் உயிர் மெய் எழுத்துகளை மிக குறுகிய நேரத்தில் சொல்லி இரண்டு புதிய உலக சாதனைகளை படைத்தார்.

கரூரை அடுத்த வெண்ணைமலையில் செயல்படும் பரணி வித்யாலயா பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் திவ்யதர்ஷன். இந்த மாணவன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும், 247 தமிழ் உயிர் மெய் எழுத்துக்களை 28 நொடிகளில் சொல்லி இரண்டு புதிய உலக சாதனையை செய்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்வில் டிஸ்கவர் சாதனை புத்தக நடுவர் பாலாஜி கலந்து கொண்டு இந்த சாதனைகளை பதிவு செய்து, சாதனைக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ஏற்கனவே, ஆங்கில வார்த்தைகளை குஜராத்தை சார்ந்த குப்தா என்ற 6 வயது சிறுவன் ஒரு நிமிடம் 40 விநாடிகளில் செய்த சாதனையை 40 விநாடிகளில் சொல்லியும், தமிழ் எழுத்துகளை பாண்டிச்சேரியை சார்ந்த 12 வயது சிறுமி ரித்திகா 81 விநாடிகளில் சொல்லியதை 28 விநாடிகளில் சொல்லி பழைய சாதனைகளை முறியடித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரங்கன், துணைத் தலைவர் பத்மாவதி மோகன ரங்கன், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் ராமசுப்பிரமணியன் ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மாணவ, மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img