இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று பெரும் பான்மை இஸ்லாமியர்களால் கொண்டா டப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல் வேறு பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட அவர்கள் புத்தாடை அணிந்து தொழுகை மேற்கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக் களை பகிர்ந்து கொண்டனர்.
அதன்படி பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டு மல்லாமல் பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
மேலும் இப்பள்ளிவாசலில் பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு தொழுகை செய் பவர்களுக்கான தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இதனை வடமாநில் தொழிலாளர்கள் வாங்கிச் சென்றனர்.
இதே போல, சத்தியமங்கலம் மணிக்கூண்டில் இருந்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடைவீதி வழி யாக ஊர்வலமாக சென்றனர். கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் தக்னி சுன்னத் ஜமாஅத் தலைவர் நதிமுல்லாகான் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மைதானத் தில் சிறப்பு பிரார்த்தனை செய்து இறை வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவிக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வட மாநில தொழிலாளர்களும் கலந்து கொண்டு பக்ரீத் தொழுகை மேற்கொண்டனர்.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று பெரும் பான்மை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன் னிட்டு கோவையில் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் மைதா னங்களில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட அவர்கள் புத்தாடை அணிந்து தொழுகை மேற்கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல் அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் சோதனை மேற்கொண்டனர்.