Homeபிற செய்திகள்ரூ.64 லட்சம் வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்த சிவகாமசுந்தரி எம்எல்ஏ

ரூ.64 லட்சம் வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்த சிவகாமசுந்தரி எம்எல்ஏ

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சேங்கல் ஊராட்சியில், மாணிக்காபுரம் வரை தார் சாலை அமைக்க கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15.40- லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த பணிகளுக்கான பூமி பூஜை சேங்கல் ஊராட்சி, சுக்காம்பட்டி புதூரில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

பணிகளை எம்எல்ஏ துவக்கிவைத்தார். இதே போல 2024-&25 ஆம் ஆண்டுக்கான 15வது நிதி குழு திட்டத்தில், ரூபாய் 48.50 லட்சம் மதிப்பீட்டில், பள்ளபாளையம் ஊராட்சி, செல்லாண்டி பாளையத்தில் சமுதாயக்கூடம் அமைக்கவும், ஆதி திராவிடர் தெரு காந்திபுரத்தில் மற்றொரு சமுதாயக்கூடம் அமைக்கவும், கலைஞர் நகரில் சுகாதார வளாகம் அமைக்கவும்,அரசு காலனியில் கழிவு நீர் வடிகால் அமைக்கவும், அப்பகுதியில் உள்ள எரிமேடைக்கு சிமெண்ட் சாலை அமைக்கவும், தாளப்பட்டி ஊராட்சியில் உள்ள செங்காளி பாளையத்தில்,நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜைகள் நேற்று அந்தந்த பகுதியில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. பூமி பூஜை முடித்த பிறகு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பணிகள் துவக்க விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுச்சாமி, தாந் தோணி ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு, தாளப்பட்டி ஊராட்சி தலைவர் லதா முருகேசன், திமுக மாவட்ட துணைசெய லாளர் பூவை. ரமேஷ் பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img