மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஒன்றியம் தோலம்பாளையம் ஊராட்சி பகுதியில் 15 ஆவது மான்ய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.18,37,000 மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.62,07,000, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18,68,000 ஆகியவற்றுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட் சியர் கிராந்தி குமார் பாடி, கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், வட்டாச்சியர் சந் திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்எம்டி.கல்யாணசுந்தரம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, டி.ஆர். சண்முகசுந் தரம், மேடூர் கணேஷ், ரமேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.