fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் சாலை மேம்பாட்டு பணி துவக்க விழா : அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலையில் சாலை மேம்பாட்டு பணி துவக்க விழா : அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலைக்கல்லூரி அருகில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் ஆற்காடு திண்டிவனம் மற்றும் திருவத்திபுரம் புறவழிச்சாலை வரை மற்றும் ஆற்காடு -திண்டிவனம் மற்றும் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி குத்து விளக்கேற்றி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளர் (நெ) சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் (நெ) பழனிவேல், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் பேசியதாவது:
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆற்காடு – திண்டிவனம் சாலை (மா நெ.6) கி மீ முதல், 61/2 முதல் 72/2 வரை மற்றும் 74/8 முதல் 77/8 வரை -14.000 கி.மீ. நீளத்திற்கு இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக மையத்தடுப்பான்களுடன் அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட உள்ளது. 16 சிறுபாலங்கள் அகலப்படுத்தப்படவும் மற்றும் 12 சிறுபாலங்கள் புதிதாக திரும்ப கட்டப்பட உள்ளன.

மேலும் விபத் துக்களை தடுக்கும் வகையில் செம்பூர், கீழ்சாத்தமங்கலம், தாமரைப்பாக்கம், ஏரிப்பட்டு, அறுவுடைத்தாங்கல், நடுக்குப்பம், ஜம்பம்பட்டு, ஜப்திகாரணை, தென்வணக்கம்பாடி, தெள்ளார், கொடியாலம், கூடலூர், இரும்புலி, தெய்யார் ஆகிய இடங்களில் 18 சாலை சந்திப்பை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் 640 மீட்டர் நீளத்திற்கு தடுப் புச்சுவரும், 500 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் பாவுதளம் அமைக்கப்படவுள்ளன.

சாலை மற்றும் சிறுபாலப் பணிக்கு இடையூறாக உள்ள 601 மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. அகற்றப்படும் மரங்களுக்கு ஈடுகட்டும் வகையில் 1 மரத்திற்கு 10 மரங்கள் வீதம் நெடுஞ்சாலைத்துறை மூலம் 6010 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். மேலும் இடையூறாக இருந்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளன.

இப்பணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு SPL இன்ஃப் ராஸ்ட்ரக்சர் நிறுவனம் சென்னை, அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவங் கப்படுகிறது.
இச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுவதால் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களுக்கு இணைப்பு சாலையாகவும், வேலூர், பெங்களூர், திருப்பதி, புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களும், அண்மையில் உள்ள ஆன்மிக திருத்தலங்களுக்கும் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் எளிதில் சென்றடைய இச்சாலை மிகவும் பயனுள்ளதாக அமைய உள்ளது.

மக்கள் தங்களுடைய விளை பொருட்களை எளிதாக விற்க செய்யாறு, ஆற்காடு, வேலூர், இராணிப்பேட்டை, வந்தவாசி, தெள்ளார், திண்டிவனம் போன்ற வியாபார பகுதிக்கு சென்ற வர பெரிதும் பயனுள்ளதாக இச் சாலை விளங்கும்.

மேலும், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவம னைக்கு மக்கள் எளிதில் சென்று வரவும், மேலும் பாண்டிச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத் துவமனைகளுக்கு சென்று வரவும் இச்சாலை பயனுள்ளதாக அமையும்.

மேலும், விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் இம்மாவட் டத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சென்று வர இச்சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும், இம்மாவட்டத்தில் சுற்றுலாதலமாக விளங்கும் திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், செய்யாறில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயம், வந்தவாசி தவலகிரிஸ்வரர் ஆலயம்,பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலயம், மேல்மருவத்தூர், திருப்பதி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர இச்சாலை பயனுள்ளதாக அமையும். அமையவுள்ள தார்சாலையில் ஜிஎஸ்பி, டபுள்யூஎம்எம், டிபிஎம், பிசி என பல அடுக்குகளாக அமையவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலைக்கல்லூரி அருகில் சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யார் சார் ஆட்சியர் செல்வி பல்லவி வர்மா, செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணி வேந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வந்தவாசி நகரமன்ற தலைவர் ஜலால், வந்தவாசி நகரமன்ற துணைத்தலைவர் சீனுவாசன், செய்யார் கோட்டப்பொறியாளர் ராஜகணபதி, தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img