வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெறுவதற்காக, மகாராஷ்டிரா வங்கி சென்னையில் வாடிக்கையாளர்களை அணுகும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் மகாராஷ்டிரா வங்கியின் செயல் இயக்குநர் ஆஷீஷ் பாண்டே பேசும்போது, ஒவ்வொரு ஆண்டும் எங்கள் வங்கி தெற்கு பிராந்தியத்தில் கணிசமாக வளர்ந்து வருகிறது. அதற்கு காரணமான வங்கி ஊழியர்களுக்கு பாராட்டுகள். வாடிக்கையாளர்கள் எங்கள் வங்கிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நன்றி.
2023 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், நிகர செயல்படாத சொத்துக்கள் (NPAs) 0.25 சதவீதமாக குறைந்துள்ளதால், மோசமான கடன்களை நிர்வகிப்பதைப் பொறுத் தவரை, மகாராஷ்டிரா வங்கி சிறந்த வங்கியாக உருவெடுத்துள்ளது.
ஆண்டு தோறும் வெளி யிடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையின்படி, பொதுத்துறை வங்கிகளில்(PSB) மட்டும் அல்லாமல், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வணிகத்தைக் கொண்ட அனைத்து வங்கிகளிலும் இதுவே மிகக்குறைந்த விகிதமாகும்.
மகாராஷ்டிரா வங்கி, அதன் செயல்படாத சொத்துக்களுக்கு முழுவது மாக ப்ரொவிசன் வழங்கியுள்ளதுடன் 98.28 சதவீதத்தில் அதிகபட்ச ஒதுக்கீடு கவரேஜ் விகிதத் தைக் கொண்டுள்ளது.
மூலதனப் போதுமான விகிதத்தைப் பொறுத் தவரை, மார்ச் 31, 2023 நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளில் மகாராஷ்டிரா வங்கி 18.14 சதவிகிதம் அதிக மாக உள்ளது.
கடன் வளர்ச்சியைப் பொறுத்த வரை, வங்கிகளின் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, வருடாந்திர அடிப்படை யில் 29.49 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்து, திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் வங்கி முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டது.
மகாராஷ்டிரா வங்கி லாபத்தில், இந்தாண்டில் அடிமட்ட அளவில் 126 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.2,602 கோடியாக உள் ளது என்றார்.



