கரூரில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, பணி முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ நேற்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, இனங்கனூர், சேந்தமங்கலம் மேற்கு, சேந்த மங்கலம் கிழக்கு ஊராட்சி பகுதிகளிலும், பள்ளப்பட்டி நகராட்சி பகுதியிலும் பகுதி நேர நியாய விலை கடை களை திறந்து வைத்தல், நாடக மேடை அமைக்கும் பணியை துவக்கி வைத்தல், தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தல் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை அந்தந்த பகுதியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
மேலும் 30 ஆயிரம் லிட் டர் கொள்ளளவு திறன் கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றதால், மக்கள் பயன்பாட்டிற்காக நீர் தேக்க தொட்டியை எம்எல்ஏ இளங்கோ திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.மணியன், வேலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி நடராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் ஊர் பொது மக்கள் என ஏராளமா னவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.