fbpx
Homeபிற செய்திகள்ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘அலுமினி மீட் 2K23’ என்ற பெயரில் கல்லூரி தொடங்கியது முதல் கடந்த ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் பணியாற்றிய பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஜான்சன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜான்சன்ஸ் உயர்கல்விக் குழுமங்களின் தலைவர் டி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, இங்கு படித்து பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். அதுவே தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை கொடுப்பதோடு, வழிகாட்டுதலாகவும் இருப்பதாக குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் முனைவர் கே.எம்.மோகனசுந்தரம் பேசும்போது, கடின உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு இங்கு பேசிய முன்னாள் மாணவர்கள் சிறந்த உதாரணம் என்றார்.

கல்லூரி துணைத் தலைவர்கள் டி.என்.கலைமணி, டி.என்.திருக்குமார், டி.நவீன்குமார், நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் சுயதொழிலில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி அனுபவங்களையும், பசுமையான நினைவுகளையும் பகிர்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img