Homeபிற செய்திகள்கரூரில் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு வண்டல் மண் எடுக்கப்படும் நீர்நிலைகளில் கலெக்டர் தங்கவேல்...

கரூரில் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு வண்டல் மண் எடுக்கப்படும் நீர்நிலைகளில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு

கரூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் ஒன்றான தோகமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஏரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் செய்தியாளர் பயணத்தின் போது தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீர்தேக் கங்கள் மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல், களிமண் மற்றும் மண் போன்ற வற்றை அகற்றி விவசாய நிலங்களை மேம்படுத்தவும் மற்றும் மட்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் இலவசமாக அனுமதி வழங்க ஏதுவாக தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் தற்போது 42 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் போன்றவற்றை வெட்டியெடுத்து விவசாய பயன்பாடு மற்றும் மட் பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவைகளாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழிலில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தெரி வித்துள்ளவாறு விவசாய பயன்பாடு மற்றும் மட் பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டியெடுத்துச் செல்ல விரும்பும் விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் தொடர்புடைய ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.

அந்தவகையில், விவசாய பயன்பாடு மற்றும் மட்பாண்டம் செய்வதற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் ஒன்றான தோகமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஏரி யில் அனுமதிக்கப்பட்ட அளவில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருவது குறித்து நேரில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணி களை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்க ளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீ லேகா தமிழ்ச்செல்வன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img