தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி., பி.எஸ்., அவர்கள் வழிகாட்டல் படி காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு ஒன்றியம் பேளாரள்ளி அரசு மேல் நிலைப் பள்ளியில், மாணவ மாணவர்களிடையே உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பொருள் பாக்கெட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்பு ணர்வுடன், புகையிலை பொருட்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும் அதனை தவிர்த்தல், தடுத் தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பேளாரள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முத்துசாமி, வேலுசாமி மற்றும் ஆசிரியை ராதா ஆகியோர் முன்னிலையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலு வலர் நந்தகோபால் அவர்கள், உணவு பொருள் பாக்கெட்டுகள் மற்றும் தின்பண்ட, குளிர்பான பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்களான பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள், ஊட் டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும் என உணவு பொருள் பாக்கெட்டுகள் கொண்டு விழிப்புணர்வு செய்தார். அயோடின் உப்பு குறித்தும் அயோடின் சத்து அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார். மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், உபயோகிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மாணவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்த்தல், தடுத்தல் அவசியம் என்றதுடன் விற்பனை கண்டால் ஆசிரியர்கள் மூலம் தகவல் அளித்தால், உணவு பாதுகாப்புத் துறை தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு செய்தார் . புகையிலைப் பொருட்கள் தடுப்பு சார்ந்து உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப் பட்டது.
500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் மற்றும் ஆசிரியை யாழினி செய்திருந்தனர். பள்ளி தமிழ் ஆசிரியர் மகேந்திரன் நன்றி உரையாற்றினார்.