கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு அறிவியல் திருவிழா” சிறப்பாக நடை பெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த குழந்தைகள் திருவிழாவில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் ஆய்வுகள் உள்ளிட்ட 342 அறிவியல் படைப்புகள் மற்றும் ஆய்வுகள் 2000 இளம் அறிவியல் விஞ்ஞானிகளால் காட்சிப்படுத்தப்பட்டன. பரணி குழந்தை விஞ்ஞானிகளின் மெச்சத் தகுந்த அறிவியல் ஆர்வமும் ஆங்கில அறிவும் பார்வையாளர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழுமத் தாளா ளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் முன்னிலை வகித்தனர்.
கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் – தனியார் பள்ளிகள், ப.க.செல்வமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் திருவிழா, ஓவியக்கண் காட்சி ஆகியவற்றைத் துவக்கி வைத்தார்.
பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன் கூறுகையில், “இரண்டு நாட்கள் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் ஆய்வுகள், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், மருத்துவ, வானியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், ஊட்டச்சத்து வகைகள், வானம் மற்றும் விண்வெளியின் அதிசயங்கள், மருத்துவ மூலிகைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்யில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் சுமார் 2000 இளம் விஞ்ஞானிகளால் 342 அறிவியல் ஆய்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இளம் மாணவர்களிடையே குழு உணர்வு, தலைமை பண்பு, அறிவியல் மனப்பான்மை, ஆங்கிலத்தில் பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகை யில் நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது” என்று கூறினார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் க.சேகர், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



