fbpx
Homeபிற செய்திகள்10 ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் பள்ளி சாதனை

காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 144 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி யுதிக்சா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ஜீவிகா 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும்,வர்ஷா 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்திலும் தேர்ச்சி பெற்றனர். பாட அளவில் கணித பாடத்தில் 15 பேரும் அறிவியல் பாடத்தில் 8 பேரும்,சமூக அறிவியல் பாடத்தில் 5 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.

ஆங்கில பாடத்தில் 6 பேர் 99 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மூன்று பேர் 96 மதிப்பெண்களும் பெற்றனர். 480 க்கு மேல் 18 பேரும், 450 க்கு மேல் 56 பேரும்,400க்கு மேல் 110 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன் அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவசதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img