இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (எஸ்ஐஆர்)க்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியதாவது:
இந்த எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்து ஏன் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி இயக் கங்களும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது? வாக்காளர் பட்டியல் சீராய்வு செய்யப்பட்டதே இல்லையா என்று கேட்டால், செய்துள்ளனர். ஆனால், இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டில் சீராய்வு செய்யப்பட்டபோது, மக் களிடம் படிவங்களை சமர்ப்பிக்க 6 மாதங்கள் அவகாசம் வழங்கப் பட்டது. இன்றைக்கு, ஒரு மாதத் திற்குள் படிவங்களை கொடுக்க வேண்டும்; மேலும், அவற்றை 10 நாளுக்குள் திருப்பி பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயர் வெளியேற்றப்பட்டால், உங்களுடைய பெயரை மறு படியும் ஏற்றுக்கொள்வதற்கு பல பிரச்சனைகள் என்ற நிலை உள்ளது. தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது, இத்தனை மாதங்கள் என்ன பண்ணிட்டு இருந்தார்கள் என்பது தெரியவில்லை.
தற்போது, கடைசி நேரத்தில் இந்த எஸ்.ஐ.ஆர்- ஐ கொண்டு வருகிறார்கள். உண்மையில், SIR என்பது பாஜக அரசின் கண்ணோட்டத்தில் இது ஒரு எக்ஸ்க்ளுசிவ் செஷன் (Exclusive Session) வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காகவே செய்யப்படும் சீராய்வாகும்.
ஹரியானா, மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே நிறைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கப்படும் மக்களின் பெயர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதைச் செய்கிறார்கள். இதில் மிக பெரிய ஆபத்து இருக்கிறது.
சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில், ஒருவர் தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால், சரியான காரணம் இல்லையென் றால், அவர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடையாது.
அதேபோல், நம்முடைய பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால், நாளை இப்படிப்பட்ட ஒரு சட்டம் கொண்டு வந்தால், நாம் இந்திய குடிமக்களாக வாழும் உரிமை இருக்குமா அல்லது அது பறிக்கப் படுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய உரிமைகளை, நம்முடைய பிரதிநிதிகளின் உரிமை களை, தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து பறித்து கொண்டு இருக்கும் ஆட்சி பாஜக தான்.
இதைக் நாம் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத் தில், காங்கிரஸ் தேசிய செயற் குழு உறுப்பினர் ஏபிசிவி சண்முகம், மதிமுக அரசியல் ஆலோசனை குழு செயலாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மெஹபூப், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், ஸ்ரீவைகுண் டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி ஷி.அமிர்தராஜ், தூத்துக் குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



